ஜய ஜானகீ பிராண நாயக (ஜ)
அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர
ஸுகு ணாகர ஸுரசேவய பவ்யதா யக ஸதா ஸகல (ஜ)
saranam 1.அமர தாரக நிசய குமுத ஹித
பரிபூர்ணாநக ஸு ரஸ ர பூ -
ஜ த தி பயோதி வாஸஹரண
ஸு ந்த ரதர வதந ஸுதா; மய வசோ
பிருந்த கோவிந்த ஸாநந்த
மாவ ராஜரப்த சுப கராநேக(ஜ )
saranam 2. நிக ம நீரஜம்ரு தஜ போஷகா-
நிமிஷவைரி வாரித ஸமீரண
க, க துரங்க ஸதகவிஹ்ருதா லயா-
க ணித வானராதி ப நதாங்க்ரியுக (ஜ)
saranam 3. இந்த் ர நீலமணி ஸ ந்நிபா பக ந
சந்தி ர ஸூர்ய நயநா பிரமேய வா-
கீ ந்தர ஜநக ஸகலேச சுப் ர நா -
கே ந்த் ரசயந சமநவைரி ஸநநுத (ஜ)
saranam 4. பாத விஜித மௌநிசாப ஸவபரி
பால வர மந்த்ர க் ரஹண்லோல
பரம ஸாந்த சித்த ஜனகஜாதி ப
சரோஜப வ வரதா கி ல (ஜ)
saranam 5. ஸ்ருஷ்டி ஸ்தி, த்யந்தகார காமித
காமிதப,லதா ஸமாநகா தர
சசீபதி நுதாப் தி, மத ஹரா நுராக
ராக ராஜித கதா ஸாரஹித (ஜ)
saranam 6. ஸஜ ஜ ந மாநசாப் தி ஸுதா கர கு-
ஸு மவிமாந ஸு ரஸா ரிபுகராப் ஜ
லாலித சரணாவகு ணாஸு ரக ண
மத ஹரண ஸநா நாஜநுத (ஜ)
saranam 7. ஓங்கார பஞ்சர கீர புர
ஹர ஸரோஜ ப வ கேசவாதி
ரூப வா ஸ வரி புஜநகாந்தக கலா-
த ர கலாத ராப்த க் ருணாகர
சரணாக த ஜ நபால ந ஸு மநோ -
ரமண நிர்விகார நிக ,மஸா ர தர (ஜ)
saranam 8. கரத்ருத, சரஜாலாஸுர மதா ப
ஹரணாவ நீஸ ர ஸு ராவ ந
கவீந பி லஜமௌநி கருத சரித்ர
ஸநநுத ஸ்ரீ தியாக ராஜநுத (ஜ)
saranam 9 புராண புருஷ நருவராத்மா ஜா
ச்ரித பராதீ ந க ர விராத ராவண
விராவணாநக பராசர மநோ -
ஹராவிக்ருத தியாகராஜ ஸந்நு த (ஜ)
சரணம்10. அக் ணித குண் கநகசேல
ஸால வித ளநாருனாப ஸமாந சரணா -
பார மகிமாத் பு த சுகவிஜ ந
ஹ்ருத்ஸத ந ஸு ரமுநி கணவிஹித
கலச நீரநிதி ரமண பாபக ஜ
ந்ரு ஸிம்ஹ வர த்யகராஜாதி நுத (ஜ)
Meaning:
அகில சகதிற்கும் சதா ஆனந்தம் விளைவிப்பவனே! சீதா பிராட்டியின் பிராண
நாதனே!நீ வெற்றியுடன் விளங்குவாயாக! சூரிய பகவானின் நற்குலத்தில் பிறந்தவனே!ராஜாதி ராஜனே!நற்குணக்கடலே!தேவரால் வணங்கப்படுபவனே!
மங்களம் தருபவனே!
(நீ) தேவர்கள் என்னும் நட்சத்திரக் கூட்டத்தினிடையே விளங்கும் சந்திரன் போன்றவன்.நிறைவு கொண்டவன். களங்கமற்றவன்.வானவர்களுக்குக் கற்பதருவைப்போன்றவன்.தயிர், பால், நிறைந்த பாணைகளைத் திருடுபவன்.முவழகன்.அமுதூரும் வாக்கையுடையவன் . ஆநிரை மேய்ப்பவன், மகிழ்ச்சி நிறைந்தவன்.திருவின் நாயகன்.என்றும் இளமையொடிருப்பவனே!நேசர்களுக்கு நன்மை புரிபவன்.
(நீ)வேதங்கலாகிற தாமரைகள் பொழியும் அமுதத்தினால் வளர்க்கப்பட்டவன்.தேவர்களின் சத்ருக்களாஹிர மேகங்களை சிதறவடிப்பதில்
காற்றைப் போன்றவன்.கருடவாகனன்.நற் கவிகளின் இதயத்தை இருப்பிடங்க்கொண்டவன்.கணக்கற்ற வானரத் தலைவர்கள் வணங்கும் பரதன் .
(நீ)இந்திர நீலமணியைப்போல் ஒளி பொருந்திய சரீரமுடையவன்.சூரிய சந்திரரை விழிகளாக உடையவன்.உகிக்கவும் முடியாத மகிமைஉடையவன்.வாகீசனாகிய பிரமனின் தந்தை.சர்வேஸ்வரன்.வெள்ளிய ஆதிசேஷன் மீது துயில்பவன்.காலனை வென்ற பரமசிவனால் வணங்கப்பெருபவன் .
(நீ)திருவடி மகிமையால் கௌதம ரிஷியின் சாபத்தை தீர்த்தவன்.வேள்வி காப்பவன்.(பலா , அதிபலா என்ற இரு )உத்தமமான மந்திரங்களைக் கற்றவன்.சாந்தம் நிறைந்த உள்ளதவன்.சீதை நாயகன்.தாமரையில் தோன்றிய பிரமனுக்கு வரமளிதவன் (நீ)ஆக்கல், அளித்தல் (காத்தல்), அழித்தல் ஆகிய முத்தொழில் புரிபவன். எண்ணற்ற கோரிக்கைகளை ஈடேற்றுபவன்.இணையற்ற வடிவழகன்.இந்திரனால் துதிக்கப்பெருபவன்.சமுத்ர ராஜனின் செருக்கை யடக்கியவன்.பக்தியினாலும் இசையினாலும் பிரகாசிக்கும் இராமாயணக் கதையின் சாரமானவன்.இதந்தருபவன்.
(நீ)நல்லோர் மனமென்னும் கடலில் முளைத்தெழும் சந்திரன்.புட்பக விமானமுடையவன் .அரக்கியாகிய சுரசையை வென்ற அனுமனின் தாமரைக்கைகளால் வருடப்பெறும் திருப்பாதன்/துஷ்டகுணமுடைய அரக்கரின் கொழுப்பையடக்குபவன்.அழிவற்றவன்.நான்முகனால் வணங்கப்பெருபவன் .
(நீ) ஓங்கார (பிரணவ) மென்னும் கிளி ,புரமெரித்த சிவன், தாமரையானாகிய பிரமன் , விஷ்ணு ஆகிய உருவங்களை யுடையவன்.இந்த்ரசித்தின் தந்தையாகிய இராவணனை வதைத்தவன்.பிறை சூடிய சிவபெருமானின் நேயன்.கருணை புரிபவன்.சரண் புகுந்த மாந்தரைப் பாலிப்பவன்.நன்மைனத்தரை மகிழ்ப்பவன்.வேறுபாடற்றவன்.வேடங்களின் சாரம்.
(நீ)கரங்களில் அம்புகளை ஏந்தியவன்.அரக்கரின் வெறியை அடக்குபவன்.தேவரையும் அந்தணரையும் காப்பவன்.கவிகளில் சூரியன் போன்ற வால்மீகியால் இயற்றப்பெர்ற்ற சரிதிரத்தினால் நன்கு போற்றப்பட்டவன்.தியாகராஜனால் வணங்கப்பெருபவன்.
(நீ)ஆதிபுருடன்.சக்கரவர்த்திதிருமகன் அண்டியவரின் வசமாகுபவன்.சுரன்,விராதன்,இராவணன் ஆகியோரை வதைத்தவன்.பாவமற்றவன்.பரசரரின் உள்ளம் கவர்ந்தவன்.விகாரமற்றவன்.தியாகராஜனால் துதிக்கப்பெருபவன்.
(நீ) அனந்த கல்யாண குனங்களையுடையவன் .பீதாம்பரம் அணிந்தவன்.மராமரங்களை பிளந்தவன்.சிவந்த திருப்பாதன்.அளவிலா மகிமையுடையவன்.அற்புத நற்கவிகளின் இதயத்தில் அமர்பவன்.தேவருக்கும்,முனிவர்களுக்கும் ஆப்தன்.பாற்கடலில் உதித்த இலட்சுமி தேவியின் நாயகன்.பாவங்கலேன்னும் யானைகளையழிக்கும் நரசிங்கம் .தியாகராஜன் முதலிய பக்தரால் துதிக்கப்பெருபவன்.
St.Thiagaraja composed five pancharatna kritis.These keernthanas are sung by musicians who congregate in front of hisSamadhi on the banks of River Kaveri at Thiruvaiyaru every year on Pakulapanchami day at St.Thiagaraja festival.The festival is celebrated three or five days every year. The above is the first Pancharatna krithi.
No comments:
Post a Comment